About Author

From the Heart of Author
கிறிஸ்துவுக்குள் இணைக்கப்பட்ட குடும்பத்தினரே !!!
நான் என்னுடைய கல்லூரி நாட்களில் தேவனுடைய இரட்சிப்பை அடைந்தேன் சிறு வயது முதல் எனது தாயார் ஊழிய பாதையில் என்னை வழிநடத்தி இருந்தார் ..சிறு வயது முதல் தேவனுக்காய் ஏதாக்கிலும் ஒன்றை செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் என் இருதயத்தில் யோசித்துக் கொண்டே இருப்பேன் … என் கல்லூரி நாட்களில் தேவனிடம் உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே என்னைக் குறித்ததான திட்டத்தை எனக்கு வெளிப்படுத்தும்படி கேட்டு கொண்டிருந்தேன் …ஒரு நாள் , உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே தேவன் எனக்காய் வைத்திருந்த திட்டம் என்னை சந்தித்தது அன்று முதல் தேவனுக்கு என் வாழ்க்கை அர்ப்பணித்து பரிசுத்த ஆவியானவருக்கு செவி கொடுக்க நேரத்தை செலுத்தினேன் …பரிசுத்த ஆவியானவர் அநேக சத்தியங்களை எனக்கு போதித்தார். மற்றும் தரிசனங்களையும் நோக்கங்களையும் எனக்கு அறிவித்தார், தேவனுக்காய் ஒரு சிறந்த குதிரையாய் நிற்க வாஞ்சித்திறந்தேன் !!
என் கல்லூரி நாட்களை முடித்து வேலை செய்து கொண்டிருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் என்னை முழு நேர ஊழியராக என்னை அழைத்தார் … விலை மதிக்க முடியாத…தேவனுடைய அழைப்பின் முதல் படி இந்தப் புத்தகம் …. அடிப்படை சத்தியங்களில் ஜனங்கள் ,ஒரே விசுவாசத்தில் இல்லாததினால் எழுப்புதல் தடையும் மற்றும் அநேக ஊழியங்களில் குழப்பங்களும் சத்துருவின் களைகள் கொண்டு வருகிறதை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்திருந்தார் பரிசுத்த ஆவியானவரின் கட்டளையின்படி கடைசி எழுப்புதலுக்குரிய நாட்களில் நாம் அனைவரும்( ஒரே சத்தியத்துக்குள்ளாக), ஒரே அடிப்படை சத்தியத்துக்குள்ளாக ஒரே விசுவாசத்திற்குள்ளாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் அப்படி இணைக்க பட்டோம் என்றால் நிச்சயமாய் இரட்சிக்கப்பட்ட அனைவருமே தேவனுக்கென்று ஊழியத்தை செய்யலாம் இதுவே பரிசுத்த வாழ்க்கைக்கான அடிப்படை சத்தியங்கள் என்ற புத்தகத்தின் நோக்கமாகும் …
அடிப்படை சத்தியங்களை அறிந்து இந்த கடைசி காலத்தில் தேவனுக்காய் அவரின் சிறந்த குதிரையாய் நிற்போம் ஆமென் !!!